ஆர்ப்பாட்டங்களை கலைக்க துப்பாக்கிகளை பயன்படுத்த மாட்டோம் – ஆணைக்குழுவில் பொலிஸ்
1 min read
பொதுமக்களின் ஆர்ப்பாட்டத்தின்போது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ள தான் அறிவுறுத்தல் வழங்கவில்லை என பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.
ரம்புக்கனையில் பொலிஸாரின் நடவடிக்கைகள் குறித்து விசாரணை நடத்த இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மேற்கொள்ளும் விசாரணையின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
குறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக பொலிஸ்மா அதிபர் மற்றும் பல சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் இன்று மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலையாகினர்.
அதற்கமைய, மேற்படி சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள மூவரடங்கிய குழுவின் முன்னிலையில் குறித்த அதிகாரிகள் இன்று காலை முன்னிலையாகினர்.
எதிர்காலத்தில் நாடளாவிய ரீதியில் இடம்பெறும் ஆர்ப்பாட்டங்களை கலைக்க துப்பாக்கிகளை பயன்படுத்த மாட்டோம் என பொலிஸார் உறுதியளித்துள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என பொலிஸ் மா அதிபர் இன்று ஆணைக்குழுவிடம் உறுதியளித்துள்ளார்.
மேலும் சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற அனைத்து தகவல்களையும் பொலிஸார் ஆணைக்குழுவிடம் கையளித்துள்ளதாக ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் நிமல் கருணாசிறி தெரிவித்தார்.