இ.தொ.க, ஈ.பி.டி.பி. மற்றும் அரவிந்த் குமார், விக்கி ரணிலுக்கு ஆதரவு
1 min read
ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான இன்றைய நாடாளுமன்ற வாக்கெடுப்பின் போது ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்க இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.
கட்சி உறுப்பினர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக இ.தொ.கா.வின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
மேலும் இன்றைய வாக்கெடுப்பின் போது ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவாக வாக்களிக்க டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈ.பி.டி.பி.யும் முடிவு செய்துள்ளது.
இதேவேளை ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்த் குமார், ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதேநேரம் ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பில் இன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு வாக்களிக்கவுள்ளதாக சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.