இன்று எந்த அசம்பாவிதமும் ஏற்படாத பட்சத்தில் நாளை ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படும் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார்.
கொழும்பில் அமைதிப் போராட்டத்தின் மீதான தாக்குதலை அடுத்து இடம்பெற்ற வன்முறையை கட்டுப்படுத்த நாடளாவிய ரீதியில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது.
இன்று புதன்கிழமை தளர்த்தப்படவிருந்த ஊரடங்கு சட்டம் நாளை (12) வரை நீடிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.