கொழும்பில் IUSF ஆர்ப்பாட்டத்திற்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு!
1 min read
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு முன்னெடுக்கப்படவிருந்த ஆர்ப்பாட்ட பேரணிக்கு தடை உத்தரவை பிறப்பிக்க பொலிஸார் விடுத்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
கறுவாத்தோட்டம் பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை கொழும்பு பிரதான நீதவான் நந்தன அமரசிங்க நிராகரித்துள்ளார்.
ஆர்ப்பாட்ட பேரணியால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் என்பதால் இந்த உத்தரவை பொலிஸார் கோரியதாக அறிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும், இந்த உத்தரவைப் பிறப்பிக்க மறுத்த நீதவான், ஆர்ப்பாட்டக்காரர்கள் வன்முறையாக நடந்து கொண்டால், நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தினார்.