அரசியலமைப்புத் திருத்தங்கள் நாட்டின் அரசியல் நெருக்கடியை தீர்க்காது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நேற்று தெரிவித்தார்.

ஒரு அதிபர் பாடசாலை மாணவர்களை துஷ்பிரயோகம் செய்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர அவரை பதவியில் இருந்து இரத்து செய்வதில் பயனில்லை என கூறினார்.

அரசியலமைப்புத் திருத்தம் இலங்கைக்கு எவ்வாறு உதவும் என தனக்குத் தெரியவில்லை என குறிப்பிட்ட சரத் பொன்சேகா அரசியல் கலாசாரத்தில் மாற்றம் தேவை என வலியுறுத்தினார்.

அரசியலமைப்புத் திருத்தமோ, இடைக்கால அரசாங்கத்தை நியமிப்பதோ அந்தத் தருணத்தில் இலங்கைக்கு உதவப் போவதில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

வீதியில் இறங்கி போராட்டம் நடத்துபவர்கள் அரசியல் கலாசாரத்தில் மாற்றத்தை விரும்புகின்றனர் என சுட்டிக்காட்டிய பொன்சேகா போராட்டங்களை நடத்தும் இளைஞர்களுக்கு தமது ஆதரவு என்றும் கூறினார்.

எனவே வீதியில் நிற்கும் இந்த இளைஞர்கள் போராட்டத்தை கைவிட கூடாது என்றும் குறித்த போராட்டத்திற்கு பொதுமக்களும் ஆதரவளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

மேலும் ரம்புக்கனை போராட்ட இடத்திற்கு அப்பகுதி பொலிஸ் பரிசோதகர் மது அருந்திவிட்டே வந்தார் என்றும் போராட்டத்தில் கொல்லப்பட்ட சமிந்த லக்ஷன் எந்த வகையிலும் வன்முறையில் ஈடுபடவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap