அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்ட அரசியலமைப்பின் 21ஆவது திருத்தச் சட்டமூலம், அமைச்சரவையின் ஒப்புதலுக்கு எடுத்துக் கொள்ளப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் ஆளும் கட்சியின் இணக்கப்பாட்டுக்கு பின்னர், அமைச்சரவை அங்கீகாரத்திற்காக நாளை சமர்ப்பிக்கப்படவுள்ளது.

கடந்த வியாழக்கிழமை ஜனாதிபதி மற்றும் சிரேஷ்ட அமைச்சர்களுக்கு இடையில் இடம்பெற்ற சந்திப்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

இந்த சந்திப்பின் போது, ​​அமைச்சர் பீரிஸ் ஊடாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அனுப்பிய பிரேரணை சட்ட வரைவில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ கூறினார்.

பிரதமரை நீக்குவதற்கான அதிகாரம், அமைச்சரவையை நியமித்தல் மற்றும் அவர்களின் பெயரை பரிந்துரைத்தல் மற்றும் அமைச்சு பதவிகளை வகித்தல் ஆகிய அதிகாரங்களைத் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தக்கவைத்துக் கொண்டுள்ளார்.

இந்த சரத்துகளை அடுத்த நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் முதல் அமுல்படுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் ஆளும்கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

21 ஆவது திருத்தத்தை மேலும் தாமதப்படுத்துவது எதிர்க்கட்சிகள் மற்றும் தாமதமான நகர்வுகள் சர்வதேச சமூகத்தின் கவலைகளுக்கு வழிவகுக்கும் என்பதனால் விரைந்து முடிக்க இந்த சந்திப்பின் பொது இணக்கப்பாடு எட்டப்பட்டது.

இதற்கிடையில், ஐக்கிய மக்கள் சக்த்தி 21 வது திருத்த சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்ற தீர்மானம் இந்த வாரம் நாடாளுமன்றம் கூடும் போது சபாநாயகரால் வாசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap