போராட்டக்கார்கள் மீதான தாக்குதல் தொடர்பில் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்ய கோட்டை நீதவான் பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கடந்த மாதம் காலி முகத்திடல் மற்றும் அலரிமாளிகைக்கு முன்பாக அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது மஹிந்த ராஜபக்ஷ ஆதரவாளர்கள் தாக்குதலை நடத்தினர்.

இந்த சம்பவம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் சந்தேக நபராக நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பெயரிடப்பட்டுள்ளார்.

இதனை அடுத்து சி.ஐ.டியினர் கடந்த ஒரு வாரமாக அவரை வலைவீசி தேடிவருகின்ற போதும் அவர் இதுவரை கைது செய்யப்படவில்லை.

இந்நிலையில் தன்னை கைது செய்வதை தடுக்குமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ரிட் மனுவை தாக்கல் செய்தார்.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap