அரசாங்கத்தில் அங்கம் வகிக்காத கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணி ஒன்றினை அமைக்க தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
எதிர்கால அரசியல் இலக்குகளை அடைவதற்காக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் விமல் வீரவன்ச கூறியுள்ளார்.
சுயாதீனமாக செயற்படுவதாக அறிவித்த நாடாளுமன்ற குழுவின் தலைவர்களுடனான சந்திப்பை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வரவிருக்கும் அரசியல் சவால்களை சமாளிக்க கூட்டணி ஒன்றினை அமைத்து செயற்பட கட்சிகள் அனைத்தும் முடிவு செய்துள்ளதாக விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார்.
தற்போதுள்ள பொருளாதாரத்தை வேறு தரப்பினரின் விருப்பங்களுக்கு அமைவாகவும் அவர்களை திருப்திப்படுத்தும் வகையிலும் இந்த அரசாங்கம் செயற்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.