பொலிஸ் காவலரணில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் 16 பேர் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அம்பாறை மாவட்டத்தின் அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட பாலமுனை வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள பொலிஸ் காவலரணில் நேற்று இரவு 11.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸார் தலைக்கவசம் அணியாத மோட்டார் சைக்கிள் ஓட்டுனரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தியபோதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவ இடத்தில் பொதுமக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து, பொலிஸ் காவலரணனுக்கு தீவைக்கப்பட்டதை அடுத்து, அதனை கட்டுப்படுத்த பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர்.

சம்பவத்தை அறிந்து அங்கு சென்ற அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட 10க்கும் மேற்பட்ட பொலிஸார் மற்றும் காயமடைந்த பொதுமக்கள் அனைவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

சம்பவம் தொடர்பில் கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி கமல் சில்வா உட்பட உயர் பொலிஸ் அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap