Category: முக்கிய செய்திகள்

பிரதமர் ராஜினாமா செய்ய வேண்டும்.. 120 உறுப்பினர்கள் தயார் என்கின்றார் கம்மன்பில

எதிர்க்கட்சி கொண்டுவரும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு 120 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளிப்பார்கள் என முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார். ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய உதய கம்மன்பில, பிரதமருக்கு ஆதரவாக ஆளும்கட்சி உறுப்பினர்கள் 46 பேர் மட்டுமே கையொப்பமிட்டுள்ளதாக கூறினார்.…

கப்ராலின் பயணத் தடை மேலும் நீடிப்பு… கடவுச்சீட்டை ஒப்படைக்கவும் உத்தரவு

இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலின் பயணத் தடை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த தடை விசாரணை முடியும் வரை அமுலில் இருக்கும் என கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை அறிவித்துள்ளது. அரச நிதியை முறைகேடாக…

அரசாங்கத்திற்கு எதிராக வாக்களிக்க இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முடிவு

தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக வாக்களிக்க இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாக கட்சியின் செயலாளர் ஜீவன் தொண்டமான் அறிவித்துள்ளார். விரிவான கலந்துரையாடலின் பின்னர் இந்த முடிவு எட்டப்பட்டதாக தனது டுவிட்டர் பக்கத்தில் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். மேலும் குறித்த முடிவு ஆளும்…

இடைக்கால அரசாங்கத்தை அமைக்க ஜனாதிபதி கோட்டா இணக்கம்

இடைக்கால அரசாங்கத்தை அமைக்க தயார் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எழுத்துமூலம் மகாநாயக்க தேரர்களுக்கு உறுதியளித்துள்ளார். இதேவேளை பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பது தொடர்பாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார். பொருளாதார நெருக்கடி தொடர்பாக மகாநாயக்கர்களினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் மற்றும் யோசனைகள்…

இன்று நள்ளிரவு முதல் மீண்டும் எரிபொருள் விலை அதிகரிக்கின்றதா ?

எரிபொருளின் விலை இன்று நள்ளிரவு முதல் மீண்டும் அதிகரிப்பதாக வெளியாகும் செய்திகளில் உண்மை இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. தனது டுவிட்டர் பக்கத்திலேயே மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சனா விஜேசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.

தடைகள் அகற்றப்பட்டன….! போராட்டக்காரர்கள் காலி முகத்திடலை வந்தடைந்தனர்..!

ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக காலி முகத்திடலில் இடம்பெறும் போராட்டம் இன்று (24) 16வது நாளாகவும் தொடர்கின்றது. பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் காரணமாக இன்று காலை, காலி முகத்திடல் பகுதிக்கு செல்லும் வீதிகள் அனைத்தும் இரும்பு வேலிகளினால் அடைக்கப்பட்டது. மாணவர்களின் போராட்டம்…

தடையை உடைத்து முன்னேற முயற்சி: பிரதமர் இல்லத்தில் பதற்றம்

கொழும்பு விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு வெளியே பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்தை உடனடியாக பதவி விலகுமாறு கோரி பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் காலிமுகத்திடலை சுற்றியுள்ள பகுதியில்…

பொது மற்றும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம் – பொது பாதுகாப்பு அமைச்சர்

பொதுப் போக்குவரத்து நடவடிக்கைகள் வழமையாக முன்னெடுக்கப்படுவதை உறுதி செய்யுமாறு பொலிஸாருக்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார். மேலும் அம்பியூலன்ஸ், பாடசாலை வாகனங்கள், அலுவலக போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்க கூடாது என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க போலீசாரிடம் கேட்டுக்கொண்டுள்ளார். இதேவேளை சுற்றுலா…

கோட்டை புகையிரத நிலையத்தில் மாணவர்கள்: நாலாபக்கமும் முற்றுகையிட்ட பொலிஸார் !

காலி முகத்திடல் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட பலர் கோட்டை புகையிரத நிலையத்திற்கு வருகை தந்துள்ளனர். எவ்வாறாயினும், ஜனாதிபதி செயலகத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டத்தை நோக்கி செல்லும் பல வீதிகள் பொலிஸாரால் தடை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இரண்டு இராஜாங்க அமைச்சர்களுக்கு முன்னர் வகித்த பதவிகள் மீண்டும் !!

நாடாளுமன்ற உறுப்பினர்களான பியல் நிஷாந்த மற்றும் லொஹான் ரத்வத்த ஆகியோர் முன்னர் வகித்த இராஜாங்க அமைச்சுப் பதவிகளுக்கு மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம், இரு நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்களது இராஜாங்க அமைச்சுப் பதவிகளில் தொடர்ந்து பணியாற்றுவார்கள் என ஜனாதிபதி ஊடக பிறவு தெரிவித்துள்ளது.…

மீண்டும் வருகின்றது அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலை !

அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலையை மீண்டும் அறிமுகப்படுத்த நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த விடயம் தொடர்பாக அடுத்த வாரம் நிதி அமைச்சருடன் கலந்துரையாடவுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் குணபால ரத்னசேகர தெரிவித்தார். எவ்வாறாயினும்,…

பல்கலைக்கழக மாணவர்கள் கொழும்பில் ஆர்ப்பாட்ட பேரணி: வீதிகளில் இரும்பு வேலிகள்!!

பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக பிக்கு ஒன்றியம் ஆகியன இணைந்து அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பில் இன்று பாரிய ஆர்ப்பாட்ட பேரணியை முன்னெடுக்கவுள்ளன. பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாண அரசாங்கம் தவறியதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் நாடுமுழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான…

ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையிலாப் பிரேரணையை கொண்டுவரும் முன்னெடுப்பில் சுமந்திரன்

நாடாளுமன்றில் ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையிலாப் பிரேரணை ஒன்றினை கொண்டு வருவதற்கு எதிர்க்கட்சிகள் நடவடிக்கை எடுத்துள்ளன. அந்தவகையில் குறித்த பிரேரணையை கொண்டுவருவதற்கான செய்ற்பாடுகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை முன்னெடுக்கவுள்ளார். எதிர்க்கட்சியினர் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக குறித்த பிரேரணையை கொண்டு…

காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் தொடர்பில் பொலிஸாரின் கோரிக்கைக்கு நீதிமன்றம் அனுமதி மறுப்பு

காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டம் செய்பவர்கள் வன்முறையில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என பொலிஸாரின் கோரிக்கையை கொழும்பு நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவையும் அரசாங்கத்தையும் பதவி விலகுமாறு கோரி காலி முகத்திடலில் அமைதியான போராட்டம்…

திருமண மண்டப கட்டணம் அதிகரிப்பு

திருமண நிகழ்வு மண்டபம் மற்றும் அது தொடர்பான ஏனைய கட்டணங்களை 40% அதிகரிக்க அகில இலங்கை விருந்து மண்டபம் மற்றும் உணவு வழங்கல் சங்கம் தீர்மானித்துள்ளது. அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் அதுல களுஆராச்சி…

பிரதமர் மஹிந்தவிற்கு எந்த பாதிப்பும் இல்லை..!

தனது உடல்நிலைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்றும் தாம் நலமாக இருப்பதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பிரதமர் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகின. எனினும் இந்தக் கருத்துக்கள் உண்மைக்குப் புறம்பானவை…

வாக்கெடுப்பு தேவையில்லாத அரசியலமைப்பு திருத்தங்களை சமர்ப்பித்தது சுயாதீன நாடாளுமன்ற குழு

நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்ப்படுவதாக அறிவித்துள்ள 41 உறுப்பினர்களும் பொது வாக்கெடுப்பு தேவைப்படாத அரசியலமைப்பு திருத்தங்களை நாடளுமன்றில் முன்வைத்துள்ளது. விஜயதாச ராஜபக்ஷவினால் 21வது திருத்தச் சட்டமூலத்தை தனியார் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சட்டமூலமாக நேற்று சபாநாயகரிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. முன்மொழியப்பட்ட திருத்தங்களில் பெரும்பாலானவை…

இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு தொடர்ந்தும் உதவுவோம் என சீனா உறுதிமொழி

பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தியில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த தொடர்ந்தும் சீனா ஆதரவளிக்கும் என இலங்கை அரசாங்கத்திற்கு சீனப் பிரதமர் லீ கெகியாங் உறுதியளித்துள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின்போது சீன பிரதமர் இந்த உறுதிமொழியை வழங்கியதாக பிரதமர் அலுவலகம்…

இந்தியாவின் நன்கொடை அடுத்தவாரம்…! ஒரு வாரத்திற்குள் இந்தோனேஷியாவின் நன்கொடை…!

இந்தியாவைனால் நன்கொடையாக வழங்கப்படவுள்ள 101 வகையான மருந்துகள் மற்றும் சத்திர சிகிச்சை பொருட்கள் என்பன எதிர்வரும் புதன்கிழமை இலங்கையை வந்தடையவுள்ளன. மேலும் இந்தோனேஷிய அரசாங்கத்தின் 340 மில்லியன் ரூபாய் பெறுமதியான நன்கொடையும் இலங்கை அரசாங்கத்திற்கு கிடைக்கும் என சுகாதார அமைச்சர் கூறியுள்ளார்.…

ஆர்ப்பாட்டங்களை கலைக்க துப்பாக்கிகளை பயன்படுத்த மாட்டோம் – ஆணைக்குழுவில் பொலிஸ்

பொதுமக்களின் ஆர்ப்பாட்டத்தின்போது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ள தான் அறிவுறுத்தல் வழங்கவில்லை என பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார். ரம்புக்கனையில் பொலிஸாரின் நடவடிக்கைகள் குறித்து விசாரணை நடத்த இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மேற்கொள்ளும் விசாரணையின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். குறித்த துப்பாக்கிச்சூட்டு…

புதிதாக அமைச்சு பதவிகளை பொறுப்பேற்றவர் இராஜினாமா…!

தனது அமைச்சு பதவியை இராஜினாமா செய்வதாக இரண்டு தினங்களுக்கு முன்னர் ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் நாலக்க கொடஹேவா தெரிவித்துள்ளார். நிலையான அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த இடைக்கால அரசாங்கம் ஒன்றினை அமைக்க இடமளிக்கும் வகையில் இந்த தீர்மானம் எடுத்ததாக…

கொரோனா தொற்றுக்கு மத்தியில் நாடாளுமன்றத்திற்கு சென்றார் பசில் ?

சில நாட்களுக்கு முன்னர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்று நாடாளுமன்றத்திற்கு வருகைதந்தார். சபாநாயகர் தலைமையில் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அவர் கலந்துகொண்டதாக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் குறித்த கட்சித் தலைவர்கள் கூட்டத்தில்…

“அரசியலமைப்புத் திருத்தங்கள் நாட்டின் அரசியல் நெருக்கடியை தீர்க்காது”

அரசியலமைப்புத் திருத்தங்கள் நாட்டின் அரசியல் நெருக்கடியை தீர்க்காது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நேற்று தெரிவித்தார். ஒரு அதிபர் பாடசாலை மாணவர்களை துஷ்பிரயோகம் செய்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர…

சர்வதேச பயணிகளுக்கான பி.சி.ஆர். கட்டுப்பாடுகளில் மேலும் தளர்வை அறிவித்தது இலங்கை

தடுப்பூசி போடத மற்றும் முழுமையாக தடுப்பூசி செலுத்தாத பயணிகளுக்கு நாட்டுக்கு வந்த பின்னர் மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர். பரிசோதனை கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளது. குறித்த பயணிகள் அனைவருக்கும் பி.சி.ஆர். சோதனை மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட காலத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி…

நெருக்கடிகளுக்கு மத்தியில் பொதுமக்களின் ஆதரவைக் கோரும் இராணுவத் தளபதி

யுத்தம் மற்றும் கொரோனா தொற்றின் போது வழங்கிய ஆத்தாவை போன்று தற்போதைய நெருக்கடி நிலையிலும் படையினர் மற்றும் பொலிஸாருக்கு ஆதரவை வழங்க வேண்டும் எனபாதுகாப்புப் படைகளின் பிரதானி மற்றும் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். விசேட…

ஒரே நாடு, ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியிலிருந்து ஒரு உறுப்பினர் இராஜினாமா

அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரே நாடு, ஒரே சட்டம் தொடர்பான ஜனாதிபதி செயலணியின் உறுப்பினர் பதவியிலிருந்து அஸீஸ் நிஸாருத்தீன் இராஜினாமா செய்துள்ளார். ரம்புக்கனை பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகம் உள்ளிட்ட மேலும் சில விடயங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தனது இராஜினாமா…

சீனாவிடமிருந்து இலங்கைக்கு அவசர மனிதாபிமான உதவி – தூதுரகம்

நாடு எதிர்கொள்ளும் நெருக்கடிகளிலிருந்து மக்கள் மீள்வதற்காக அவசர மனிதாபிமான உதவிகளை வழங்க, சீன வெளிவிவகார அமைச்சும், சீன சர்வதேச அபிவிருத்தி ஒத்துழைப்பு நிறுவனமும் தீர்மானித்துள்ளன. குறித்த உதவிகளை சீன வெளிவிவகார அமைச்சும் சீன சர்வதேச அபிவிருத்தி ஒத்துழைப்பு நிறுவனமும் ஒன்றிணைந்து வழங்க தீர்மானித்துள்ளதாக இலங்கைக்கான…

ரம்புக்கனையில் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் தளர்வு

ரம்புக்கனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் அமுலில் இருந்த ஊரடங்குச் சட்டம் இன்று வியாழக்கிழமை அதிகாலை 5 மணி முதல் தளர்த்தப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் ரம்புக்கன பிரதேசத்தில் போராட்டம் காரணமாக ஏற்பட்ட குழப்ப நிலையையடுத்து ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது. போராட்டத்தின் போதான மோதலில்…

மருந்து தட்டுப்பாடு ஏற்படும் – சுகாதார அமைச்சர்!

சர்வதேச நிறுவனங்களின் நிதியைப் பயன்படுத்தி மருந்துகளை கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமண நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இருப்பினும், அவற்றினை இறக்குமதி செய்வதற்கான கால அவகாசம் கொடுக்கப்பட்டால், 80 நாட்களுக்கு மருந்து தட்டுப்பாடு இருக்கும் என்றும் அவர் கூறினார்.…