புதிய அரசாங்கத்தின் அமைச்சரவையின் எண்ணிக்கையை 25 ஆக அதிகரிக்க மேலும் 10 அமைச்சர்கள் இன்று (23) பதவியேற்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஏற்கனவே 13 அமைச்சரவை அமைச்சர்கள் இருவேறு தினங்களில் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.
இந்நிலையில் இன்று வழங்கப்படும் அமைச்சர் பதவியை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பெற்றுக்கொள்ளும் என அறியமுடிகின்றது.
அதன்படி டக்ளஸ் தேவானந்தா இன்று பதவியேற்பார் என்றும் ஜீவன் தொண்டமான் இந்தியாவில் இருந்து நாடு திரும்பியதும் பதவியேற்பார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர விவசாய அமைச்சராக நியமிக்கப்படவுள்ளார் என்றும் கூறப்படுகின்றது.