கோட்டகோகம போராட்டம் தொடர வேண்டும் என்றும், போராட்டத்தில் தலையிடப் போவதில்லை என்றும் புதிதாகப் பதவியேற்றுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள வழுகாராமய ரஜமஹா விகாரைக்கு விஜயம் செய்த பிரதமர், அங்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
மேலும், அமைச்சரவையை அமைப்பது குறித்து தாம் முடிவு செய்யவில்லை என்றும் நாடாளுமன்றத்தில் இரு தரப்புக்கும் பெரும்பான்மையை காட்டுவேன் என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.