குருநாகல் பகுதியில் 13,200 லீற்றர் பெட்ரோலை ஏற்றிச் சென்ற எரிபொருள் போக்குவரத்து பௌசர் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன் காரணமாக பௌசரில் இருந்த பெருமளவிலான எரிபொருள் இந்த விபத்தில் வீணாகியுள்ளது.

கொலன்னாவையில் இருந்து திருகோணமலை, கிண்ணியா நோக்கி பயணித்த எரிபொருள் பவுசரே இவ்வாறு விபத்துக்குள்ளானது.

விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், மழையுடனான காலநிலை காரணமாக வீதி வழுக்கி இந்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

குருநாகல் தீயணைப்புப் பிரிவினர் பௌசருக்கு தண்ணீர் தெளித்து மீண்டும் வீதிக்கு கொண்டுவந்துள்ள அதேவேளை குருநாகல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap