அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தத்தை சீர்குலைக்கும் நடவடிக்கையாக, பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கு முன்னுரிமை வழங்கும் வகையில் நாடாளுமன்றில் வலியுறுத்த பசில் ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் தீர்மானித்துள்ளனர்.

பொருளாதார ஸ்திரத்தன்மையைக் கொண்டுவருவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ள அதேவேளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் அதற்கு இணக்கம் தெரிவித்துள்ளார்.

21ஆவது திருத்தச் சட்டத்திற்கு எதிராக இதுவரை ஆளும்கட்சி உறுப்பினர்கள் சிந்தக மாயதுன்ன, சரத் வீரசேகர மற்றும் நாலக கொடஹேவா ஆகியோர் பேசியுள்ளனர்.

அத்தோடு பொருளாதார குறைகளை நிவர்த்தி செய்வதில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இருப்பினும் மக்களின் உணர்வுகளை கருத்தில் கொண்டு அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம் சட்டமாக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா, அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ உள்ளிட்ட பலர் வலியுறுத்தியுள்ளனர்.

இத்தகைய அரசியலமைப்பு மாற்றங்களையே மக்கள் கோருவதாகவும் அவர்களது கோரிக்கை மதிக்கப்பட வேண்டும் என்றும் நிமல் லான்சா கூறியுள்ளார்.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap