நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி அவர்களினால் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டமை குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கவலை வெளியிட்டுள்ளது.

அவசரகால பிரகடனம் இலங்கையில் அரசியல் ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதற்கான முயற்சிகளை மேலும் சிக்கலாக்கும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே எந்த காரணத்திற்காக அவசரகால நிலையை ஜனாதிபதி பிரகடனப்படுத்தினார் என்பதற்கான காரணங்களை மக்களுக்கு உடனடியாக விளக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும் கருத்து சுதந்திரம், அமைதியான முறையில் ஒன்றுகூடும் சுதந்திரம் உள்ளிட்ட மக்களின் அடிப்படை உரிமைகளை உறுதி செய்யுமாறும் அரசாங்கத்திடம் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

அவசர நிலை பிரகடனம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் நாட்டு மக்களை அமைதியாக இருக்கவும், அமைதியான முறையில் செயல்படவும் சட்டத்தரணிகள் சங்கம் அழைப்பு விடுக்கிறது

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap