நாடாளுமன்றத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டமையை கண்டித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அரசாங்கம், பொலிஸ் அதிகாரிகள் மற்றும் படையினர் உட்பட சம்பந்தப்பட்ட அனைவரையும் மிகுந்த கட்டுப்பாட்டுடன் செயற்படுமாறு அச்சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
சட்டத்திற்கு இணங்க போராட்டம் நடத்தும் உரிமையை பயன்படுத்துபவர்களை கைது செய்ய முடியாது என்றும் அச்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.