Author: EDITOR

உக்ரைனுக்கு மேலும் 800 மில்லியன் டொலர் பாதுகாப்பு உதவி – அமெரிக்கா

உக்ரைனுக்கு மேலும் 800 மில்லியன் டொலர் மதிப்பிலான பாதுகாப்பு உதவிகளை வழங்க உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார். கனரக ஆயுதங்கள், வெடிபொருட்கள் மற்றும் தந்திரோபாய ஆளில்லா விமானங்கள் என்பன உக்ரைனுக்கு வழங்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, யஉக்ரைனுக்கு…

போர் நிறுத்ததுக்கான முன்மொழிவை ரஷ்யா நிராகரித்துள்ளது – உக்ரைன்

போர் நிறுத்ததுக்கான முன்மொழிவை ரஷ்யா நிராகரித்துள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வொளொடிமிர் ஸெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். எவ்வாறிருப்பினும், அவரது இந்த கருத்தை ரஷ்யா இதுவரையில் உறுதிப்படுத்தவில்லையென வெளிநாட்டு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

முன்னாள் அமைச்சர் டலஸ் அழகபெரும ஜனாதிபதிக்கு கடிதம்

முன்னாள் அமைச்சர் டலஸ் அழகபெரும ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். இதில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உட்பட தற்போதைய அமைச்சரவையில் உள்ள அனைவரும் உடனடியாக பதவி விலக வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் நாடாளுமன்றில் உள்ள அனைத்து…

சமையல் எரிவாயு விலை அதிகரிப்பை நிராகரித்தது அரசாங்கம்

லிட்ரோ சமையல் எரிவாயு விலையை அதிகரிப்பதற்காக நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்படவில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. எனவே, இன்று நள்ளிரவு முதல் 12.5 கிலோ எடைக்கொண்ட சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட மாட்டாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. முன்னதாக இன்று நள்ளிரவு முதல் 12.5…

புதிதாக அமைச்சு பதவிகளை பொறுப்பேற்றவர் இராஜினாமா…!

தனது அமைச்சு பதவியை இராஜினாமா செய்வதாக இரண்டு தினங்களுக்கு முன்னர் ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் நாலக்க கொடஹேவா தெரிவித்துள்ளார். நிலையான அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த இடைக்கால அரசாங்கம் ஒன்றினை அமைக்க இடமளிக்கும் வகையில் இந்த தீர்மானம் எடுத்ததாக…

கொரோனா தொற்றுக்கு மத்தியில் நாடாளுமன்றத்திற்கு சென்றார் பசில் ?

சில நாட்களுக்கு முன்னர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்று நாடாளுமன்றத்திற்கு வருகைதந்தார். சபாநாயகர் தலைமையில் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அவர் கலந்துகொண்டதாக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் குறித்த கட்சித் தலைவர்கள் கூட்டத்தில்…

ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு இடையில் நீயா நானா போட்டி..!

நிறைவேற்று அதிகாரத்தை பறிக்கும் 19 வது திருத்தம் மற்றும் நாடாளுமன்றத்திற்கு மீண்டும் அதிகாரங்களை வழங்கும் நடவடிக்கைகளுக்கு இடையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையில் ஒரு இழுபறி நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. குறித்த விடயம் தொடர்பாக ஆளும்கட்சி மற்றும்…

“அரசியலமைப்புத் திருத்தங்கள் நாட்டின் அரசியல் நெருக்கடியை தீர்க்காது”

அரசியலமைப்புத் திருத்தங்கள் நாட்டின் அரசியல் நெருக்கடியை தீர்க்காது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நேற்று தெரிவித்தார். ஒரு அதிபர் பாடசாலை மாணவர்களை துஷ்பிரயோகம் செய்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர…

சர்வதேச பயணிகளுக்கான பி.சி.ஆர். கட்டுப்பாடுகளில் மேலும் தளர்வை அறிவித்தது இலங்கை

தடுப்பூசி போடத மற்றும் முழுமையாக தடுப்பூசி செலுத்தாத பயணிகளுக்கு நாட்டுக்கு வந்த பின்னர் மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர். பரிசோதனை கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளது. குறித்த பயணிகள் அனைவருக்கும் பி.சி.ஆர். சோதனை மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட காலத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி…

நெருக்கடிகளுக்கு மத்தியில் பொதுமக்களின் ஆதரவைக் கோரும் இராணுவத் தளபதி

யுத்தம் மற்றும் கொரோனா தொற்றின் போது வழங்கிய ஆத்தாவை போன்று தற்போதைய நெருக்கடி நிலையிலும் படையினர் மற்றும் பொலிஸாருக்கு ஆதரவை வழங்க வேண்டும் எனபாதுகாப்புப் படைகளின் பிரதானி மற்றும் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். விசேட…

எதிர்க்கட்சிகள் விடுத்த கோரிக்கைக்கு அமைய நாடாளுமன்றத்தில் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி

2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் எதிர்க்கட்சிகள் விடுத்த கோரிக்கைக்கு அமைய நாடாளுமன்றத்தில் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் தாக்குதலுக்கு நீதி கோரி ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் கறுப்பு உடை அணிந்து சபைக்கு வருகை…

பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு மனித உரிமை ஆணைக்குழு அழைப்பு!

ரம்புக்கனை சம்பவம் தொடர்பாக பொலிஸ்மா அதிபர் மற்றும் பல சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளை விசாரணைக்கு முன்னிலையாகுமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது. அதற்கமைய, நாளை (22) காலை 11 மணிக்கு இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அவர்களுக்கு…

சமையல் எரிவாயு விநியோகம் : அதிக தேவை உள்ள பகுதிகளுக்கு முன்னுரிமை

அதிக தேவை உள்ள பகுதிகளுக்கு முன்னுரிமை அளித்து சமையல் எரிவாயு விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. கப்பல் மூலம் கொண்டுவரப்பட்ட 1,400 மெட்ரிக் தொன் எரிவாயுவை கப்பலிலிருந்து எரிவாயு இறக்கும் பணி நேற்று இரவு நடைபெற்றது. இந்த…

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார் கீரன் பொல்லார்ட்

மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் போட்டிகளுக்கு மேற்கிந்திய தீவுகள் அணிக்கு தலைமை தாங்கிய கீரன் பொல்லார்ட் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். சகலதுறை வீரரான பொல்லார்ட் 123 ஒரு நாள் போட்டிகளில் 2,706 ஓட்டங்கள் மற்றும் 55 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். அதே நேரத்தில்…

ஒரே நாடு, ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியிலிருந்து ஒரு உறுப்பினர் இராஜினாமா

அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரே நாடு, ஒரே சட்டம் தொடர்பான ஜனாதிபதி செயலணியின் உறுப்பினர் பதவியிலிருந்து அஸீஸ் நிஸாருத்தீன் இராஜினாமா செய்துள்ளார். ரம்புக்கனை பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகம் உள்ளிட்ட மேலும் சில விடயங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தனது இராஜினாமா…

ரம்புக்கனை சம்பவத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடும் கண்டனம்

ரம்புக்கனையில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தை வன்மையாகக் கண்டிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், இந்த சம்பவம் தொடர்பான சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. ரம்புக்கனை சம்பவம் காரணமாக…

சீனாவிடமிருந்து இலங்கைக்கு அவசர மனிதாபிமான உதவி – தூதுரகம்

நாடு எதிர்கொள்ளும் நெருக்கடிகளிலிருந்து மக்கள் மீள்வதற்காக அவசர மனிதாபிமான உதவிகளை வழங்க, சீன வெளிவிவகார அமைச்சும், சீன சர்வதேச அபிவிருத்தி ஒத்துழைப்பு நிறுவனமும் தீர்மானித்துள்ளன. குறித்த உதவிகளை சீன வெளிவிவகார அமைச்சும் சீன சர்வதேச அபிவிருத்தி ஒத்துழைப்பு நிறுவனமும் ஒன்றிணைந்து வழங்க தீர்மானித்துள்ளதாக இலங்கைக்கான…

முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை – முடிவை மீளாய்வு செய்ய திட்டம்

பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என முடிவை மீளாய்வுக்கு உட்படுத்துமாறு ஆலோசனை வழங்கியுள்ளதாக சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் நாடாளுமன்றில் உரையாற்றியபோது கருத்து தெரிவித்த அவர், 15 பேர் கொண்ட நிபுணர் குழுவினால், இந்த ஆலோசனை…

ரம்புக்கனையில் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் தளர்வு

ரம்புக்கனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் அமுலில் இருந்த ஊரடங்குச் சட்டம் இன்று வியாழக்கிழமை அதிகாலை 5 மணி முதல் தளர்த்தப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் ரம்புக்கன பிரதேசத்தில் போராட்டம் காரணமாக ஏற்பட்ட குழப்ப நிலையையடுத்து ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது. போராட்டத்தின் போதான மோதலில்…

மருந்து தட்டுப்பாடு ஏற்படும் – சுகாதார அமைச்சர்!

சர்வதேச நிறுவனங்களின் நிதியைப் பயன்படுத்தி மருந்துகளை கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமண நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இருப்பினும், அவற்றினை இறக்குமதி செய்வதற்கான கால அவகாசம் கொடுக்கப்பட்டால், 80 நாட்களுக்கு மருந்து தட்டுப்பாடு இருக்கும் என்றும் அவர் கூறினார்.…

கறுப்பு ஜூலை நினைவு தினத்தை முன்னிட்டு பிரித்தானியாவில் போராட்டம்

கறுப்பு ஜூலை நினைவு தினத்தை முன்னிட்டு பிரித்தானியா டவ்னிங் ஸ்ட்ரீட்டில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. கறுப்பு ஜூலை தமிழினப் படுகொலை நாள் என்றும் இன அழிப்புக்கு நீதி வேண்டும் என பல்வேறு கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தொடர்ச்சியாக…

புலம்பெயர் தமிழர்கள் நீதி கோரி பிரித்தானியாவில் போராட்டம்

வலிந்து காணமல் ஆக்கப்பட்டவர்களின் தினமான நேற்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவரை மீட்கும் முகமாக பிரித்தானியாவில் போராட்டம் ஒன்று இடம்பெற்றது. தாயகத்தில் இலங்கை அரசால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவரை மீட்கும் முகமாக Trafalgar Square ல் இந்த போராட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. புலம்பெயர்…

ஜூலை கலவரம் – பிரித்தானியாவில் கண்டன ஆர்ப்பாட்டம்

1983 ஜூலை 23ஆம் திகதி திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட தமிழின அழிப்புக்கு எதிரான தினத்தை நினைவூட்டும் முகமாகவும் மற்றும் இதற்கான கண்டனத்தை தெரிவிக்கும் விதமாக பிரித்தானியாவில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்பாக கண்டன ஆர்ப்பாட்டமொன்று நேற்று முன்னெடுக்கப்பட்டது. நாட்டில் நிலவும் அசாதாரன சூழலிலும்…

விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்ககும் முகமாக பிரித்தானியாவில் பிரசார நடவடிக்கை

தமிழீழ விடுதலைப் புலிகளின் தடையை சட்டரீதியாக நீக்குவதற்கான முன்னேற்பாடுகள் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சுவிஸில் விடுதலைப் புலிகள் ஒரு விடுதலையமைப்பே என நீதிமன்ற தீர்ப்பின் தொடர்ச்சியாக பிரித்தானியாவிலும் அதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன இந்நிலையில் அது பற்றிய பிரச்சார…

“சுதந்திர தினம் தமிழ் மக்களின் கரிநாள்” – நாடுகடந்த உறவுகளால் பிரித்தானியாவில் போராட்டம்

இலங்கை சோஷலிச குடியரசின் 72 ஆவது சுதந்திர தினம், தமிழ் மக்களின் கரிநாள் என தெரிவித்து பிரித்தானியாவில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மற்றும் தமிழர் ஒருங்கிணைப்பு குழு என சில அமைப்புக்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த…

இலங்கை அரசாங்கத்தின் செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரித்தானியாவில் போராட்டம்!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தை புறம்தள்ளி பொறுப்புக் கூறலை கைவிட முற்படும் இலங்கை அரசாங்கத்தின் செயற்பாட்டை கண்டித்து பிரித்தானிய பிரதமரின் அலுவலகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது. நேற்று (புதன்கிழமை) இரவு நடைபெற்ற இந்த போராட்டத்தில், காணாமற்போனோர் விடயத்தில் உலக நாடுகள் தலையிட்டு…