Author: EDITOR

வியட்நாமில் இருந்து 150க்கும் மேற்பட்ட இலங்கை அகதிகள் நாடு கடத்தப்பட்டனர்

வியட்நாமில் மீட்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த 151 இலங்கையர்கள் நேற்று இரவு விசேட விமானம் மூலம் நாடு திரும்பியதாக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் கடமை முகாமையாளர் தெரிவித்தார். அவர்களிடம் தனிப்பட்ட வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு வருவதாகவும், மேலதிக விசாரணைகளுக்காக அவை குற்றப்…

சிறைக்கு பதிலாக வீட்டு காவல் முறையை கொண்டுவருகின்றது அரசாங்கம் !

சிறு குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்படும் சந்தேக நபர்களை அதற்கு பதிலாக வீட்டுக் காவலில் வைத்திருப்பது தொடர்பான சட்டங்களை கொண்டுவர நீதி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இவ்வாறான சந்தேகநபர்கள் சிறையில் பல்வேறு நபர்களுடன் பழகுவதுடன் கடுமையான குற்றவாளிகளாக சமூகமயமாகி விடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ள…

தமிழ் கட்சிகளுடன் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படவில்லை – சம்பந்தன்

உள்ளூராட்சித் தேர்தலில் ஏனைய தமிழ் கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுவது குறித்து இன்னும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடும் என்றாலும் ஏனைய தமிழ் கட்சிகளுடன் இணைந்து…

புதிய அரசியல் கூட்டணி குறித்து வடக்கு, கிழக்கு பிரதிநிதிகளுடன் பேச்சு – வாசுதேவ

புதிய அரசியல் கூட்டணி அடுத்த மாதம் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் அதற்காக எதிர்க்கட்சிகளுடன் ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளதாகவும் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். அதிலும் வடக்கு, கிழக்கு மாகாணங்களை முன்னிலைப்படுத்தி அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் அதற்காக தமிழ் பேசும் மக்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தையில்…

உள்ளூராட்சித் தேர்தலுக்கான வர்த்தமானி அறிவித்தல் ஜனவரிக்கு பிற்போடப்பட்டது !

உள்ளூராட்சித் தேர்தலுக்கான வர்த்தமானி அறிவித்தலை ஜனவரி முதல் வாரத்திற்கு ஒத்திவைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு உறுதிப்படுத்தியுள்ளது. தேர்தலை நடத்துவதற்கு ஆணைக்குழு தயாராகியுள்ளது என்றும் இம்முறை மரத்திலாலான புதிய வாக்குப் பெட்டிகள் இம்முறை தயாரிக்கப்படாது என்றும் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். உள்ளூராட்சித் தேர்தல் எதிர்வரும்…

ஒரு தேநீர் மற்றும் ஒரு மதிய உணவுப் பொதியின் விலை குறைந்துள்ளது

தேநீரின் விலையை 20 ரூபாயினால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. அதேவேளை மதிய உணவுப் பொதி ஒன்றின் விலையை 10% குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அச்சங்கத்தின் பேச்சாளர் அசேல சம்பத் தெரிவித்தார். நேற்று நள்ளிரவு முதல்…

எரிவாயுவுக்கு விலை சூத்திரம்

எரிவாயுவுக்கான விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்த விலைச் சூத்திரம் ஒவ்வொரு மாதமும் 5ஆம் திகதி புதுப்பிக்கப்படும் என அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். இது தவிர நீர் மற்றும் கழிவுநீர்க் கட்டணத்தை திருத்தவும்…

9 வருடங்களின் பின்னர் நாளை அதிகரிக்கின்றது மின்சாரக் கட்டணம்!!

2013 ஆம் ஆண்டிற்குப் பிறகு முதன்முறையாக மின்சாரக் கட்டணத்தை ஒட்டுமொத்தமாக 75% அதிகரிக்க பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி நாளை (10) முதல் அமுலுக்கு வரும் வகையில் 75 சதவீத மின்சார கட்டணத்தை அதிகரிக்க மின்சார சபைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.…

நீதிமன்றத்தின் அனுமதியின்றி மஹிந்த, பசில் வெளிநாடு செல்ல முடியாது

நீதிமன்றத்தின் அனுமதியின்றி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ வெளிநாடு செல்வதற்கு எதிரான இடைக்கால தடை உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி இருவருக்கு விதிக்கப்பட்ட வெளிநாடு செல்வதற்கான பயணத்தடையை எதிர்வரும் 4ஆம் திகதி வரை நீடித்து உயர் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டுள்ளது.…

பிறப்புச் சான்றிதழில் தேசிய அடையாள அட்டை இலக்கம்: இன்று முதல் புதிய நடைமுறை

இந்நாட்டில் பிறக்கும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் பிறப்புச் சான்றிதழில் தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உள்ளடக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த தீர்மானம் இன்று (திங்கட்கிழமை) முதல் ஆரம்பிக்கப்பட உள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் அறிவித்தல் விடுத்துள்ளது. முதற்கட்டமாக கம்பஹா, தெஹிவளை, ஹகுரன்கெத்த, குருநாகல், இரத்தினபுரி, தமன்கடுவ…

இலங்கைக்கு வருகின்றது சீனக் கப்பல்: தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள இந்திய கடற்படை !!

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை எதிர்வரும் 11ஆம் திகதி வந்தடையவுள்ள சீன ஆராய்ச்சிக் கப்பலை இந்திய கடற்படை கண்காணித்து வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. செயற்கைக் கோள்கள், ரொக்கெட்டுகள், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் போன்றவற்றை கண்காணிக்கும் நவீன கருவிகளைக் கொண்ட…

முன்னாள் ஜனாதிபதிக்கு முழு வசதியையும் பாதுகாப்பையும் அரசாங்கம் வழங்க வேண்டும் என கோரிக்கை

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மீண்டும் இலங்கைக்கு வந்து அரசியலில் ஈடுபட விரும்பினால் அதனை வரவேற்போம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அக்கட்சியின் பொதுச் செயலாளர் சாகர…

குறைகின்றது சமையல் எரிவாயுவின் விலை: மக்களுக்கு நல்ல செய்தி வெளியானது !

எதிர்வரும் 5ஆம் திகதி எரிவாயுவின் விலை குறைக்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், உலக சந்தையில் எரிவாயு விலை குறைந்துள்ளதாகவும், எனவே இந்த சலுகை நுகர்வோருக்கும் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.…

எரிபொருள் விலையில் திருத்தம்: இன்று முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் !

எரிபொருள் விலையில் இன்று 01 திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதோடு புதிய விலை பிற்பகல் அறிவிக்கப்படவுள்ளது. உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள நிலையில் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு பீப்பாய் ப்ரெண்ட் கச்சா எண்ணெயின் விலை 103.2 டொலர்…

நாளையதினம் நாடாளுமன்ற வளாகத்தில் ஜனாதிபதியாக பதவியேற்கின்றார் ரணில் !

இலங்கையின் 8ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க நாளையதினம் நாடாளுமன்ற வளாகத்தில் பதவியேற்கவுள்ளார். புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பில் ரணில் விக்கிரமசிங்க அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்று இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார். ரணில் விக்கிரமசிங்கவிற்கு…

இன்றைய நாணய மாற்று விகிதம் : டொலர் மற்றும் பவுண்ட்ஸின் இன்றைய பெறுமதி இதோ

ரூபாய்க்கு நிகரான வெளிநாட்டு நாணயங்களின் பெறுமதி உள்ளடக்கிய இன்றைய நாணய மாற்று விகிதத்தை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. அதன்படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 368.90 ரூபாயாகவும் கொள்விலை 358.53 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது. மேலும் ஸ்டெர்லிங் பவுண்ட்ஸ் ஒன்றின்…

ஒன்றிணைய வாருங்கள், சஜித், சம்பந்தன், மஹிந்தவிற்கு ஜனாதிபதி ரணில் அழைப்பு

ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்ற வளாகத்தில் பதவியேற்க அனுமதிக்குமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் சஜித் பிரேமதாச, டலஸ் அழகப்பெரும, மஹிந்த ராஜபக்ஷ, இரா.சம்பந்தன் மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோரை இணைந்து பணியாற்ற வருமாறும் அழைப்பு விடுத்தார். மக்கள்…

அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்று புதிய ஜனாதிபதியானார் ரணில்

ரணில் விக்கிரமசிங்க அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்று இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு ஆதரவாக 134 வாக்குகளும் டல்ஸ் அழகப்பெருமவிற்கு 82 வாக்குகளும் அனுர குமார திஸாநாயக்காவிற்கு 3 வாக்குகளும் கிடைத்தன. நாடாளுமன்றில் இன்று செலுத்திய வாக்குகளில் செல்லுபடியான…

நாடாளுமன்ற வாக்கெடுப்பு சற்றுமுன்னர் நிறைவு செல்லுபடியற்ற வாக்குகள் – 04 !!

இலங்கையின் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான நாடாளுமன்ற வாக்கெடுப்பு சற்றுமுன்னர் நிறைவடைந்துள்ளது. அதன்படி 223 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தபோதும் 2 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்கவில்லை என உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இலங்கை தமிழ் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் மற்றும் கஜேந்திரகுமார்…

திங்கள், செவ்வாய்,வியாழன் மட்டுமே பாடசாலை – மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

எதிர்வரும் 25ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் பாடசாலை நடவடிக்கைகள் தொடர்பான அறிவிப்பை கல்வி அமைச்சு இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி எதிர்வரும் திங்கட்கிழமை பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட பின்னர் வாரத்தில் 03 நாட்கள் பாடசாலைகள் நடைபெறும் என அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதன்படி திங்கள்,…

கஜேந்திரன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை

அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. இதேவேளை அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. தற்போது புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான…

“எத்தனை பேருக்கு முதுகெலும்பு இருக்கிறது என்று பார்போம்“ சுமந்திரன் கடும் தாக்கு

ஜனாதிபதி வேட்பாளர் டலஸ் அழகப்பெருமவிற்கு ஆதரவளிக்க தமது கட்சி தீர்மானித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்று அறிவித்திருந்தது. எனினும் சில உறுப்பினர்கள் இரகசிய வாக்கெடுப்பின் போது ரணிலுக்கு வாக்களிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ…

இ.தொ.க, ஈ.பி.டி.பி. மற்றும் அரவிந்த் குமார், விக்கி ரணிலுக்கு ஆதரவு

ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான இன்றைய நாடாளுமன்ற வாக்கெடுப்பின் போது ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்க இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது. கட்சி உறுப்பினர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக இ.தொ.கா.வின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். மேலும் இன்றைய…

ஜனாதிபதி என்ற தனிநபரைப் பொருட்படுத்த வேண்டாம் – அனுர

ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தனிநபரைப் பொருட்படுத்தாமல், இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் என்று தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. நேற்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அனுரகுமார திஸாநாயக்க, பத்து பேருக்கு மிகாமல் அமைச்சரவை நியமிக்கப்பட வேண்டும் என தெரிவித்தார். இன்றைய தேர்தலில் யார்…

டலஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவளிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானம்

ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பில் டலஸ் அழகப்பெருமவிற்கு ஆதரவை வழங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. நாளை நடைபெறவுள்ள புதிய ஜனாதிபதிக்கான தெரிவில் யாருக்கு வாக்களிப்பது என்பது குறித்து கலந்துரையாட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு இன்று கூடியது. இதன்போது…

டலஸ் அழகப்பெருமவுக்கு மனோ, ஹக்கீம் மற்றும் மைத்திரி அணி ஆதரவு

டலஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவளிக்க தமிழ் முற்போக்கு கூட்டணி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிங்கள் தீர்மானித்துள்ளன. நாளை நடைபெறவுள்ள புதிய ஜனாதிபதிக்கான தெரிவில் டலஸ் அழகப்பெரும மற்றும் ரணில் விக்ரமசிங்கவிற்கு இடையில் கடும் போட்டி நிலவும் என…

வாக்கெடுப்பில் சுதந்திரக் கட்சி பங்கேற்கும்!

ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பில் சுதந்திரக் கட்சி பங்கேற்கும் என அதன் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாச, டலஸ் அழகப்பெரும மற்றும் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோருடன் கலந்துரையாடி யாருக்கு ஆதரவு என்பது குறித்து தீர்மானிப்போம்…

டலஸ் அழகப்பெருமவுக்கு அதிகரிக்கும் ஆதரவு

விமல் வீரவன்ச, உதய கம்மன்பில உள்ளிட்ட சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர் குழு, நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவாக வாக்களிக்க தீர்மானித்துள்ளது. ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பில் டலஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவு என தெரிவித்து சஜித் பிரேமதாச போட்டியில் இருந்து விலகியிருந்தார்.…

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பேருந்து கட்டணம் குறைப்பு !

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பேருந்து கட்டணம் குறைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பேருந்து கட்டணம் 2.23% குறைக்கப்படவுள்ளதுடன் குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 40 ரூபாயில் இருந்து 38 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. மற்ற அனைத்து கட்டணங்களும் நள்ளிரவு முதல் 2.23%…

ரணிலின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி செல்லாது என தாக்கல் செய்யப்பட்ட மனுவின் தீர்ப்பு இதோ

ரணில் விக்கிரமசிங்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி செல்லாது என தாக்கல் செய்யப்பட்ட மனுவை நிராகரித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நாகாநந்த கொடிதுவக்கினால் உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட குறித்த மனு தொடர்பான தீர்ப்பு இன்று அறிவிக்கப்படும் என நேற்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில்…