நம்பிக்கையில்லா பிரேரணைகளுக்கு ஆதரவளிக்கப் போவதில்லை என எங்கள் மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தின தேரர் தெரிவித்துள்ளார்.
இன்று (04) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், நாட்டை சீர்குலைக்கும் நம்பிக்கையில்லா பிரேரணைகளை ஆதரிக்க மாட்டேன் என கூறினார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகவில்லை என்றால், நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மூலம் அவரை பதவியில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என முன்னதாக கூறியிருந்தார்.