யுத்தம் மற்றும் கொரோனா தொற்றின் போது வழங்கிய ஆத்தாவை போன்று தற்போதைய நெருக்கடி நிலையிலும் படையினர் மற்றும் பொலிஸாருக்கு ஆதரவை வழங்க வேண்டும் எனபாதுகாப்புப் படைகளின் பிரதானி மற்றும் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ள ஜெனரல் சவேந்திர சில்வா, அத்தியாவசிய சேவைகள் மற்றும் போக்குவரத்து என்பன எவ்வித பிரச்சினைகளும் இன்றி இயங்குவதை உறுதிப்படுத்துமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் மேற்கொள்ளப்பட்டுவரும் அமைதியான போராட்டங்களில் ஒரு சிலர் இணைந்து தடைகளை உருவாக்கி வீதிகளில் பயணிப்பவர்களுக்கு இடையூறு விளைவிக்கும் நடவடிக்கையை மேற்கொண்டுவருகின்றமை அவதானிக்க முடிந்துள்ளதாகவும் அவர் கூறினார்.