யாழ்ப்பாணம், கொடிகாமம் பகுதியில் இராணுவ முகாம் அமைப்பதற்காக காணி அளவீடு செய்வதற்கு எடுக்கப்பட்ட முயற்சி மக்களின் எதிர்ப்பை அடுத்து கைவிடப்பட்டது.

J/ 326 கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள தனியாருக்கு சொந்தமான 10.5 பரப்பு காணியில் இராணுவத்தினர் முகாம் அமைத்து நிலைகொண்டுள்ளனர்.

குறித்த இராணுவ முகாமை நிரந்தர முகமாக அக்காணியில் நிர்மாணிக்கும் முயற்சியின் முதல் கட்டமாக நிலஅளவை செய்வதற்கான பணிகள் நேற்று (20) முன்னெடுக்கப்படவிருந்தது.

இந்நிலையில் குறித்த காணியை அளவீடு செய்வதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், காணி அளவீட்டு பணிகள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளன.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap