அரசியலமைப்பின் 21வது திருத்தச் சட்டமூலம் இன்று திங்கட்கிழமை மீண்டும் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

உத்தேச திருத்தம் கடந்த வாரம் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட போதிலும், அந்த வரைவுக்கு அனுமதி கிடைக்கவில்லை.

இந்நிலையில் 21வது திருத்தச் சட்டத்தில் மேலும் திருத்தங்களை முன்வைக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

அதன்படி கட்சிகள் மற்றும் சில அமைப்புகளின் முன்மொழிவுகளை உள்ளடக்கி இன்று மாலை நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் மீண்டும் முன்வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று மாலை இடம்பெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ 21வது திருத்தத்தை சமர்பிக்கின்றார்.

21வது திருத்தத்தில் உள்ள பல முக்கிய விடயங்கள் குறித்து அனைத்து தரப்பினருக்கும் இடையில் பொது இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக இம்மாத ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்டது.

அதன்படி 21வது திருத்தம் தொடர்பாக கலந்துரையாடுவதற்காக கட்சித் தலைவர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பல தடவைகள் சந்தித்து கலந்துரையாடினர்.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap