பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் 21வது திருத்தம் தொடர்பான கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.
பிரதமர் அலுவலகத்தில் பிற்பகல் 3.30 மணிக்கு இந்த சந்திப்பு நடைபெற உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் 21வது திருத்தம் எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.