அனைத்துக் கட்சி கூட்டம் இன்று பிற்பகல் 3.00 மணிக்கு இணையவழி ஊடாக இடம்பெறும் என சபாநாயகர் அலுவலகம் அறிவித்துள்ளது
நாட்டின் தற்போதைய நிலைமை மற்றும் மேலதிக நடவடிக்கைகள் குறித்து இதன்போது ஆராயப்படும் என சபாநாயகர் அலுவலகம் மேலும் கூறியுள்ளது.
இதேவேளை நாடாளுமன்றத்தில் இன்று நடைபெறவிருந்த கட்சித் தலைவர்கள் கூட்டம் இரத்து செய்யப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று தெரிவித்தார்.
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ள நாடாளுமன்ற அமர்வுக்கு முன்னர் கட்சித் தலைவர்கள் சந்திப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் நாட்டில் நிலவும் சூழ்நிலை காரணமாக உறுப்பினர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னரே நாடாளுமன்றம் கூட்டப்படும் என சபாநாயகர் கூறியுள்ளார்.