ஹம்பாந்தோட்டை மாவட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் ராஜபக்ஷ பிரதி சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இரகசிய வாக்கெடுப்பில் 31 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அஜித் ராஜபக்ஷ பிரதி சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டார்.

நாடளுமன்றில் இன்று இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பில் அஜித் ராஜபக்ஷவிற்கு 109 வாக்குகளும் ரோஹினி கவிரத்னவிற்கு 78 வாக்குகளும் கிடைத்தன.

இதேவேளை செல்லுபடியற்ற வாக்குகள் 25 பதிவாகியதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார்.

வாக்கெடுப்பு இடம்பெற்றால் சுதந்திரக் கட்சியினர் வாக்கு சீட்டில் குறுக்கு கோடிட்டு பதிவு செய்வார்கள் என மைத்திரிபால சிறிசேன அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap