எயார்பஸ் A330 விமானம் கட்டுநாயக்கவில் தடுத்து வைக்கப்பட்டதை அடுத்து, ரஷ்ய விமான நிறுவனமான ஏரோஃப்ளோட் இலங்கைக்கான விமானங்களை தற்காலிகமாக நிறுத்த முடிவு செய்துள்ளது.
தடையில்லாமல் விமான சேவை இடம்பெறும் என்பதில் நம்பிக்கை இல்லை என்பதனால் இலங்கைக்கான சேவைகளையும் கொழும்புக்கான டிக்கெட் விற்பனையையும் இடை நிறுத்துவதாகவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
அத்தோடு ஜூன் 2, 4 மற்றும் 5 திகதிகளில் கொழும்பில் இருந்து மொஸ்கோவிற்குத் திரும்பும் பயணிகள் ஜூன் 4 மற்றும் ஜூன் 5 ஆம் திகதிகளில் புறப்படும் விமானங்கள் மூலம் நாடு திரும்பலாம் என்றும் அறிவித்துள்ளது.
2021 ஆம் ஆண்டு நவம்பர் 4 ஆம் திகதி இலங்கையில் விமான சேவையை ஆரம்பித்த ரஷ்யாவின் ஏரோஃப்ளோட் விமான நிறுவனம் எட்டு மாதங்களுக்குப் பிறகு இலங்கைக்கான விமான சேவைகளை இடைநிறுத்தியுள்ளது.
குத்தகை நிறுவனத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக கடந்த 2ஆம் திகதி, ரஷ்ய விமானம் இலங்கையிலிருந்து வெளியேறுவதற்கு கொழும்பு வர்த்தக உயர் நீதிமன்றம் விதித்த தடை உத்தரவு 16 ஆம் திகதி வரை அமுலில் உள்ளது.
இந்த விடயம் தொடர்பாக ரஷ்யாவின் வெளிவிவகார அமைச்சு மொஸ்கோவிற்கான இலங்கைத் தூதுவர் ஜனிதா அபேவிக்ரம லியனகேவை வரவழைத்து விமானம் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டமைக்கு கடும் கண்டனத்தை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.
- நாளை முதல் பகல் மற்றும் இரவில் 03 மணி நேரம் மின்துண்டிப்பு !
- மறு அறிவித்தல் வரை அரச உத்தியோகத்தர்களுக்கான உத்தரவு தொடரும் – பொது நிர்வாக அமைச்சு
- வரிசையில் நிற்கும் பொதுமக்களுக்கு நாளை முதல் டோக்கன்!
- நாளை (27) முதல் பேருந்து கட்டணமும் அதிகரிப்பு !! புதிய விலை விபரம் இதோ
- எரிபொருள் விலை அதிகரிபின் எதிரொலி: அனைத்து உணவுப் பொருட்களின் விலைகளும் அதிகரிப்பு