வலிமை படத்தை தொடர்ந்து ஹெச்.வினோத் மற்றும்அஜித்கூட்டணியில் உருவாகி வரும் ‘ஏகே61’ படம் குறித்த எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

வலிமை படம் வெளியாவதற்கு முன் ரசிகர்கள் எவ்வளவு ஆர்வமாக இருந்தார்களோ அதேபோல இந்த படத்திற்கும் ரசிகர்கள் அதிக ஆவலுடன் காத்துகொண்டு இருக்கின்றனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது.  பே வியூ ப்ராஜெக்ட்ஸ் பேனரின் கீழ் போனி கபூர் இப்படத்தை தயாரிக்கிறார்.

வங்கி கொள்ளையை அடிப்படையாக வைத்து உருவாக்கப்படும் இந்த படத்திற்கு சென்னையின் அண்ணாசாலை போன்று செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடத்தப்படுகிறது.

‘அசுரன்’ படத்தின் மூலம் பிரபலமான மஞ்சு வாரியார் இந்த படத்தில் ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல்கள் வெளியானது. மேலும் இப்படத்தில் இணைந்துள்ள நடிகர்கள் குறித்து தற்போது தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

2008ம் ஆண்டு வெளியான ‘வாரணம் ஆயிரம்’ படத்தின் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனனின் உதவி இயக்குனராக பணிபுரிந்த வீரா என்பவர் தற்போது ‘ஏகே61’ படத்தில் ஒப்பந்தமாகி இருக்கிறார்.

இவர் ஏற்கனவே நடுநிசி நாய்கள் மற்றும் 2015ல் வெளியான ராஜதந்திரம் படத்தில் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரபல இயக்குனரும், நடிகருமான சமுத்திரக்கனி இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

பல பிளாக்பஸ்டர் படங்களில் சமுத்திரக்கனி நடித்து இருக்கிறார், தற்போது அஜித்துடன் இணைந்து ‘ஏகே61’ படத்தில் நடிக்கவிருக்கிறார்.

ஏகே61′ படத்தில் நடிகர் அஜித் ஹீரோ மற்றும் வில்லன் என இரண்டு வேடங்களில் நடிக்கிறார். சமுத்திரக்கனி சமீபத்தில் வினோதய சித்தம் என்ற படத்தை இயக்கி இருந்தார். மேலும், புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap