நிறைவேற்று அதிகாரத்தை பறிக்கும் 19 வது திருத்தம் மற்றும் நாடாளுமன்றத்திற்கு மீண்டும் அதிகாரங்களை வழங்கும் நடவடிக்கைகளுக்கு இடையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையில் ஒரு இழுபறி நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

குறித்த விடயம் தொடர்பாக ஆளும்கட்சி மற்றும் அதன் கூட்டணி உறுப்பினர்களிடையே கடுமையான அரசியல் ஸ்திரமின்மை நிலவுவதாக அறியமுடிகின்றது.

அவர்களில் பலர் இப்போது எதிர்க்கட்சியில் அமர்ந்து 11 உறுப்பினர்களைக் கொண்ட கூட்டணியுடன் மஹிந்த ராஜபக்சவை பிரதமர் பதவியில் இருந்து இராஜினாமா செய்ய வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ள அதேவேளை மற்றவர்கள் இராஜினாமா செய்தால் ஜனாதிபதியே பதவி விலக வேண்டும் என்று கூறியுள்ளனர்.

அண்மைய அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சு நியமனங்கள் அனைத்தும் ஜனாதிபதியின் தெரிவினால் மாத்திரம் மேற்கொள்ளப்பட்டதாகவும், பிரதமருடன் இது குறித்து கலந்தாலோசிக்கப்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அனுபவம் வாய்ந்த மூத்த உறுப்பினர்களை அமைச்சரவையில் இணைக்குமாறு பிரதமர் அழைப்பு விடுத்தார், ஆனால் ஜனாதிபதி ராஜபக்ஷ இளைய மற்றும் புதிய அமைச்சரவையே போராட்டத்தில் ஈடுபடுபவர்களை அமைதிப்படுத்தி நாட்டை மீட்டெடுக்க முடியும் என நம்பினார்.

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி இந்த வாரம் 19வது திருத்தத்தை நாடாளுமன்றத்தில் முன்வைக்கும் அதேவேளை சரத்துகளில் சில திருத்தங்களுடன் 19வது திருத்தத்தை விரைவில் நாடாளுமன்றத்தில் பிரதமர் சமர்ப்பிக்கவுள்ளார்.

இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, 19ஆவது திருத்தச் சட்டத்தை ஆதரிப்பதாகக் குறிப்பிட்டுள்ள நிலையில், இந்த நெருக்கடிக்கு உடனடித் தீர்வு என்ன என்பது தொடர்பில் சர்வகட்சித் தலைவர்களுடன் இரண்டு நாள் கலந்துரையாடல் ஒன்றை நடத்துவதற்கு முன்மொழிந்துள்ளார்.

இன்றும் நாளையும் கட்சித் தலைவர்கள் கூடி முன்மொழிவுகள் தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாகவும், கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி பதவியிலிருந்து விலகுவது என்பதும் அனைத்துக் கட்சித் தலைவர்களிடமும் இணக்கப்பாட்டைக் கோரும் முன்மொழிவுகளில் ஒன்று என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

ஒருமித்த கருத்து எட்டப்பட்டால், இன்றைக்கும் முடிவு சபாநாயகரிடம் தெரிவிக்கப்பட்டு, பின்னர் அவர் ஜனாதிபதிக்கு தெரிவிப்பார். எனினும் ஜனாதிபதி பதவி விலகுவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap