அவசரமாக இன்று கூடுகின்றது தேர்தல்கள் ஆணைக்குழு !
1 min read
தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்கள் பங்கேற்கும் விசேட கூட்டம் ஒன்று இன்று வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகள் தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.
தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு எவ்வாறு சட்ட கட்டமைப்பில் தலையிடுவது என்பது தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.