தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் பாதுகாப்பு கடமைக்கு நியமிக்கப்பட்டிருந்த இராணுவ சிப்பாய் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
வெள்ளவத்தையில் அமைந்துள்ள எம்.ஏ.சுமந்திரனின் இல்லத்தில் பாதுகாப்பு கடமைக்காக நியமிக்கப்பட்டிருந்த அதிகாரி ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர் 22 வயதுடைய இராணுவ சிப்பாய் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அவர் தனது T56 ரக துப்பாக்கியை பயன்படுத்தி தன்னைத்தானே சுட்டுக் கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.