வீட்டுத்தோட்டத்தின் மூலம் பொதுமக்கள் தமது தேவையை பூர்த்தி செய்ய வேண்டும் என விவசாயத்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இது பெரும் உதவியாக இருக்கும் என விவசாய பணிப்பாளர் நாயகம் கலாநிதி அஜந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.
கண்டியில் இன்று நடைபெற்ற ‘நாட்டை வளர்ப்போம் வெல்வோம்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
தங்களுக்கு தேவையான உணவுகளை பெற்றுக்கொள்ள வீட்டுத்தோட்டத்தில் நாட்டம் காட்ட வேண்டும் என கலாநிதி அஜந்த டி சில்வா கேட்டுக்கொண்டார்.