கடவுச்சீட்டு விண்ணப்பங்களை ஏற்கும் செயற்பாடு இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில் பத்தரமுல்லை பிரதான வீதியை மறித்து மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கணினி கட்டமைப்பில் மீண்டும் கோளாறு ஏற்பட்டதன் காரணமாக கடவுச்சீட்டு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் செயற்பாடு இன்று (5) தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, நேற்றைய தினமும் இவ்வாறு அறிவித்தலை விடுத்திருந்தபோதும், திடீர் செயலிழப்பு சரிசெய்யப்பட்டுள்ளதாகவும் சேவைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அறிவித்தது.
இந்நிலையில், இன்றைய தினம் கணினி கட்டமைப்பில் மீண்டும் கோளாறு ஏற்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.