உண்டியல் முறை ஊடாக 50,000 யூரோக்களை மாற்ற முயன்ற ஒருவர் பொரலஸ்கமுவ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை நேற்றைய தினமும் உண்டியல் முறையின் ஊடாக 47,000 அமெரிக்க டொலர்களை மாற்ற முயன்ற இருவர் கைது செய்யப்பட்டனர்.

குறித்த இருவரும் பொரலஸ்கமுவவில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.

தற்போது உத்தியோகப்பூர்வமற்ற (உண்டியல் முறை) பணப்பரிவர்த்தனை செய்யும் நபர்களை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது. (CBC TAMIL)

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap