வருமான வரியை அதிகரிக்கும் புதிய வரவு செலவுத் திட்டம் விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இதேவேளை நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காண வரிகளை அதிகரித்து சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலவரப்படி வரி வருமானம் 24 சதவீதத்தில் இருந்து 8.6 சதவீதமாக குறைந்துள்ளதாக நிதி அமைச்சர் அலி சப்ரி, நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதார நிலை குறித்து உரையாற்றிய நிதியமைச்சர், சட்டத்தரணிகள் சங்கம் முன்வைத்துள்ள 18 மாதத் திட்டத்தை கவனத்திற் கொள்ளவேண்டும் என கேட்டுக்கொண்டார்.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap