வீட்டின் மாடியில் இருந்து தவறி விழுந்து ஒருவர் உயிரிழப்பு
1 min read
அம்பாறையில் வசிக்கும் 42 வயதுடைய ஒருவர் வீட்டின் மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம்நேற்று (ஜூன் 1) மாலை இடம்பெற்றுள்ளதுடன், படுகாயமடைந்த அவர் அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
சடலம் அம்பாறை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அம்பாறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.