கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்பாடு முனையம் கடந்த நாட்களாக பரபரப்பாக காணப்படுவதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
வெளிநாடுகளுக்கு வேலை வாய்ப்புக்காகச் செல்பவர்களுக்கு அரசாங்கம் அதிக வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.
அத்தோடு வெளிநாட்டு கல்விக்காக மாணவர்கள் மற்றும் வெளிநாட்டுக்கு சுற்றுலா செல்லும் பயணிகள் அதிகரித்தமையே இதற்கு காரணம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இலங்கையில் உள்ள நுழைவு முனையம் அவ்வளவு பரபரப்பாக இல்லை என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.