மொரட்டுவ முதல்வர் சமன் லால் பெர்னாண்டோவின் இல்லத்திற்கு ஓரு சில குழுவினரால் தீ வைக்கப்பட்டுள்ளது.
அமைதியான முறையில் இடம்பெற்ற போராட்டத்தை ஆதரவாளர்களை கொண்டு அடக்க முற்பட்ட நிலையில் மக்கள் மேலும் கோபமடைந்துள்ளனர்.
இதன் காரணமாக மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் வந்த பேருந்துகள் மற்றும் வாகனங்கள் பொதுமக்களால் அடித்து உடைக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.