யாழ்ப்பாணத்தில் 123 மில்லியன் ரூபாய் பெறுமதியான சுமார் 492 கிலோ கிராம் கேரளா கஞ்சாவுடன் 20 வயதுடைய இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுற்றுக்காவல் நடவடிக்கையில் கடற்படையினர் ஈடுப்பட்டபோது சந்தேகத்திற்கிடமான படகு ஒன்றினை வழிமறித்து சோதனையிட்டபோதே கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
225 பொதிகளில் சுமார் 492 கிலோ கிராம் கேரளா கஞ்சாவினையும் படகை செலுத்திச் சென்ற யாழ்ப்பாணத்தை சேர்ந்த 20 வயதுடைய இளைஞனையும் கடற்படையினர் கைது செய்தனர்.
இதனை அடுத்து கைப்பற்றப்பட்ட கஞ்சாவும் இளைஞனும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.


