கடைக்கு சென்ற 9 வயது சிறுமியை காணவில்லை : தவிக்கும் பெற்றோர்
1 min read
அட்டலுகம பிரதேசத்தில் 9 வயது சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளதாக பண்டாரகம பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்று வெள்ளிக்கிழமை காலை காணாமல் போன சிறுமி (மொஹமட் அக்ரம் பாத்திமா ஆயிஷா) தொடர்பில் அவரது பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளனர்.
இன்று காலை வீட்டிற்கு அருகில் உள்ள கடைக்கு சென்ற குறித்த சிறுமி திரும்பி வரவில்லை என தாய் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
கடையை விட்டு வெளியே சென்ற சிறுமி வீடு திரும்பாதது சிசிடிவி காட்சிகளில் தெரியவந்துள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.