தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் டான் திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றுள்ள திரைப்படம்.

அட்லீயின் உதவி இயக்குனர் சிபிச் சக்கரவர்த்தி இயக்கத்தில் வெளியான டான் படம் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.

படத்தில் நடித்திருந்த எஸ் ஜே சூர்யா, சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிப்பு பாராட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது இத்திரைப்படம் ஆறு நாள் முடிவில் தமிழகத்தில் மட்டும் ரூபாய் 42 கோடி வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகி சிவகார்த்திகேயன் ரசிகர்கள் கொண்டாட வைத்துள்ளது.

தமிழ் சினிமாவில் அஜித் விஜய் அடுத்ததாக வசூல் மன்னனாக சிவகார்த்திகேயன் உருவெடுத்து வருவதாக விமர்சகர்கள் கூறிவருகின்றனர்.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap