கொழும்பு காலிமுகத்திடல் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் (28) 50 நாட்கள் நிறைவடைந்துள்ளன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகக் கோரி கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி இளைஞர்கள் குழுவொன்று போராட்டத்தை ஆரம்பித்தது.

இந்நிலையில் குறித்த போராட்டம் தொடங்கி இன்று 50வது நாளை எட்டியுள்ள நிலையில் இன்று போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கோட்டை நீதவான் நீதிமன்றில் முறைப்பாடு செய்த பொலிஸார் நீதிமன்றம் ஊடாக போராட்டத்திற்கு தடை உத்தரவைப் பெற்றுள்ளனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்குவதாக நம்பப்படும் சிலருக்கும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்பவர்களுக்கும் கோட்டை பகுதியின் பல வீதிகளில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap