சாதகமான காலநிலை நீடித்தால் 45,000 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இன்று (20) விநியோகிக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
இதேவேளை எண்பதாயிரம் (80,000) சிலிண்டர்கள் நாளை (21) சந்தைக்கு விநியோகிக்கப்படும் என்றும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
சீரற்ற காலநிலை காரணமாக 2,800 மெற்றிக் தொன் எரிவாயு ஏற்றிச் சென்ற கப்பல் செவ்வாய்க்கிழமை (17) பிற்பகல் நாட்டை வந்தடைந்த போதிலும் அதனை தரையிறங்க முடியவில்லை.
எனினும் கப்பல் கொழும்பு துறைமுகத்தில் இருந்து கெரவலப்பிட்டி எரிவாயு சேமிப்பு முனையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இறக்கும் நடவடிக்கை கடந்த 18 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.
நாளாந்தம் 80,000 எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் அதில் மேல் மாகாணத்திற்கு முன்னுரிமை அளித்து 35,544 சிலிண்டர்களை வழங்குபவதாகவும் அந்நிறுவம அறிவித்தது.