குமுதினி படகுப் படுகொலையின் 37 ஆவது ஆண்டு நினைவு இன்று ஞாயிற்றுக்கிழமை (15) அனுஷ்டிக்கப்டுகின்றது.

இதேநாளில் 1985 ஆம் ஆண்டு நெடுந்தீவிற்கும் புங்குடுதீவிற்கும் இடையில் சேவையாற்றிய குமுதினிப் படகில் பயணம் செய்தவர்கள் கூட்டாகப் படுகொலை செய்யப்பட்டனர்.

குமுதினி படகு நெடுந்தீவு துறைமுகத்திலிருந்து 64 பயணிகளுடன் பயணித்துக் கொண்டிருந்த வேளை கடற்படையினரால் இந்த படுகொலை அரங்கேறியது.

இதில் குழந்தைகள், பெண்கள் உட்பட மொத்தம் 33 பேர் குத்தியும் வெட்டியும் கொல்லப்பட்ட அதேவேளை முப்பதுக்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் காப்பாற்றப்பட்டனர்.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap