21வது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களிப்பதில் இருந்து விலகி இருக்க பொதுஜன பெரமுன தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரட்டைக் குடியுரிமை கொண்ட பசில் ராஜபக்ஷ நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்காமல் தடுப்பதே முக்கிய காரணம் என அறியமுடிகின்றது.

அரசியலமைப்பின் 21வது திருத்த வரைவு இன்று 23 அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இரட்டைக் குடியுரிமை உள்ளவர்கள் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்க முடியாத வகையில் திருத்தம் கொண்டு வரப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தற்போதுள்ள சுயாதீன ஆணைக்குழுக்களுடன் மேலதிகமாக, தேசிய கணக்காய்வு அலுவலகம் மற்றும் கொள்முதல் ஆணைக்குழு ஆகியன சுயாதீனமாக மாற்றப்படவுள்ளன.

மத்திய வங்கியின் ஆளுநரை அரசியலமைப்பு சபையின் கீழ் தெரிவு செய்யும் முன்மொழிவு 21வது திருத்த வரைவில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap