27 வருடங்களாக இந்தியா வைத்திருந்த சாதனை தகர்ப்பு : 2 – 0 என தொடரை வென்றது இலங்கை அணி !!
இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-0 என கைப்பற்றி இலங்கை அணி வெற்றிபெற்றுள்ளது.
இந்த வெற்றியின் மூலம் இந்தியா அணி 27 வருடங்களாக வைத்திருந்த சாதனையும் தகர்க்கப்பட்டது.
கடந்த 27 வருடங்களாக ஒருநாள் தொடரை இந்திய அணி, இலங்கையிடம் இழக்கவில்லை.
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி, கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 7 விக்கெட்கள் இழப்பிற்கு 248 ஓட்டங்களை குவித்தது.
இதன் பின்னர் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 138 ஓட்டங்களுக்குள் சுருண்டது, இதனால் இலங்கை அணி 110 ஓட்டங்களினால் வெற்றிபெற்றது.
இந்த வெற்றியின் மூலம் இந்தியா அணி 27 வருடங்களாக வைத்திருந்த சாதனையும் தகர்க்கப்பட்டது. ஆட்ட நாயகனாகவும் தொடரின் நாயகனாகவும் பந்துவீச்சில் துப்பட்டதிலும் அசத்திய துனித் வெல்லாலகே தெரிவு செய்யப்பட்டார்.
————————————————————————
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி தற்போது கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 7 விக்கெட்கள் இழப்பிற்கு 248 ஓட்டங்களை குவித்துள்ளது.
இலங்கை அணி சார்பாக அவுஷக பெர்னாண்டோ 96 ஓட்டங்களையும் குஷால் மெண்டிஸ் 59 ஓட்டங்களையும் பெத்தும் நிசங்க 45 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தனர்.
பந்துவீச்சில் ரியான் பராக் 3 விக்கெட்களை சாய்க்க, மொஹமட் சிராஜ், அக்சர் பட்டேல், வொஷிங்டன் சுந்தர் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினை கைப்பற்றினர்.
இந்நிலையில் 249 என்ற ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கோடு இந்திய அணி பதிலுக்கு துடுப்பெடுத்தாடி வருகின்றது.
இதனை அடுத்து 4.3 ஆவது ஓவரில் அசித்த பெர்னாண்டோ வீசிய பந்தில் போல்ட் முறையில் சுப்மேன் கில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதன்போது அணியின் ஓட்ட எண்ணிக்கை 37 ஆக இருந்தது.
இதன் பின்னர் இந்திய அணி 53 ஓட்டங்களை பெற்றுக்கொண்டிருந்த போது Rohit Sharma துனித் வெல்லாலகேயின் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேற அதனை தொடர்ந்துவந்த Rishabh Pant 9 10 ஆவது ஓவரில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
பின்னர் விராட் கோலி 11 ஆவது ஓவரில் அட்டமிழந்துவெளியேற இந்திய அணி 71 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களை இழந்து தடுமாறியது. பந்துவீச்சில் துனித் வெல்லாலகே இரண்டு விக்கெட்களையும் மகேஷ் தீக்ஷன மற்றும் அசித்த பெர்னாண்டோ ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
இதனை தொடந்து 12.1 ஓவரில் அக்சர் பட்டேல் ஆட்டமிழந்து வெளியேறிய இந்திய அணிய 73 ஓட்டங்களுக்குள் 5 விக்கெட்களை இழந்து தடுமாறியது. இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் சிறந்த முறையில் பந்துவீசியிருந்தனர்.
இறுதியில் பின்வரிசை வீரர்கள் பெரிதும் சோபிக்காததை அடுத்து இந்திய அணி — ஓட்டங்களுக்குள் சுருண்டது, இதனால் இலங்கை அணி — ஓட்டங்களினால் வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்தியா அணி 27 வருடங்களாக வைத்திருந்த சாதனையும் தகர்க்கப்பட்டது.