விடுமுறை தினங்களில் விசேட சேவை – தபால் திணைக்களம்
பண்டிகை காலத்தை முன்னிட்டு வழங்கப்பட்டுள்ள விடுமுறை தினங்களில் விசேட சேவையொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ரமழான், புத்தாண்டை காலத்தை முன்னிட்டு விசேட தபால், பொதிகள் சேவையை முன்னெடுக்க இலங்கை தபால் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
வாடிக்கையாளர்களின் தேவைகளைக் கருத்திற்கொண்டு, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை தபால் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் 12 ஆம் திகதி விடுமுறை நாளாக இருந்தாலும் நாட்டிலுள்ள தபால் நிலையங்கள், உப தபால் நிலையங்கள் ஊடாக பொதிகள் சேவைகள் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேநேரம் பணம் அனுப்பும் நடவடிக்கைகளும் எவ்வித தடங்கலும் இன்றி முன்னெடுக்கப்படும் என தபால் மாஅதிபர் எஸ்.ஆர்.டபிள்யூ. சத்குமார கூறியுள்ளார்.