மைத்திரியின் தீர்மானத்தை தடுக்கும் தடை உத்தரவு நீடிப்பு
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய பொறுப்புகளில் இருந்து சிரேஷ்ட உறுப்பினர்களை நீக்க எடுக்கப்பட்ட முடிவுக்கு எதிரான தடை உத்தரவு எதிர்வரும் 24ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் மஹிந்த அமரவீர, இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன, நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க ஆகியோர் கட்சியின் முக்கிய பதவிகள் இருந்து கடந்த வாரம் நீக்கப்பட்டனர்.
சுதந்திரக் கட்சியில் இருந்து நீக்கப்பட்டமைக்கு எதிராக அவர்களினால் தாக்கல் செய்யப்பட்டமனுக்கள் இன்று விசாரணைக்கு வந்தபோதே கொழும்பு மாவட்ட நீதிபதி இந்த இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இந்த மனுவின் பிரதிவாதிகளாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவர் மைத்திரிபால சிறிசேன, பதில் பொதுச் செயலாளர் துஷ்மந்த மித்ரபால ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.
நியாயமான ஒழுக்காற்று விசாரணையின்றி தம்மை கட்சியில் இருந்து நீக்கி, கட்சி செயற்குழு எடுத்த தீர்மானம் சட்டத்திற்கு முரணானது என அறிவிக்குமாறு அவர்கள் நீதிமன்றத்தை கோரியிருந்தனர்,
மேலும் கட்சியின் தலைமையால் எடுக்கப்பட்ட அத்தகைய தீர்மானம் செல்லாது என அறிவிக்க வேண்டும் எனவும் கோரி சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர்.