அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு WTA பைனல்ஸ் போட்டியை நடத்துகின்றது சவுதி அரேபியா

அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு பெண்களுக்கான டபிள்யு.டி. ஏ பைனல்ஸ் டென்னிஸ் போட்டியை சவுதி அரேபியா நடத்தவுள்ளது.

பல மாதங்களாக மேற்கொள்ளப்பட்டு வந்த மதிப்பீட்டு செயன்முறையைத் தொடர்ந்து பெண்கள் டென்னிஸ் சங்கம் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

அதன்படி பெண்கள் டென்னிஸ் சங்கம் மற்றும் சவுதி அரேபியாவிற்கு இடையில் மூன்றாண்டு ஒப்பந்தம் கைத்திடப்பட்டுள்ளது.

மேலும் குறித்த சம்பியன்ஷிப்பிற்கான பரிசுத் தொகை கடந்த ஆண்டினை விட 70 சதவீதம் அதிகரிக்கப்பட்டு 15.25 மில்லியன் டொலர்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

சவூதி அரேபியாவில் இந்த போட்டியை நடத்துவது தமது நாட்டின் டென்னிஸ் விளையாட்டுக்கு ஒரு முக்கிய தருணம் என சவுதி விளையாட்டுத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளில் கால்பந்து, கோல்ஃப், ஃபார்முலா போன்ற விளையாட்டுகளில் சவூதி அரேபியா அதிக முதலீடு செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.