பல்கலை மாணவர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப் புகையை, நீர்த்தாரை பிரயோகம்
ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்த ஆர்ப்பாட்ட பேரணி மீது பொலிஸார் கண்ணீர்ப் புகையையும் நீர்த்தாரை பிரயோகத்தையும் மேற்கொண்டுள்ளனர்.
ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு அருகில் பல்கலைக்கழக மாணவர்களினால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஹேமாகம வைத்தியசாலையில் தனியார் பல்கலைக்கழக மாணவர்களுக்கு பயிற்சிகளை வழங்குவது தொடர்பான அமைச்சரவை முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது அந்த பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்ட நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைப்பதற்காக கண்ணீர்ப் புகையை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.