நடிகர் விஜய் வெளியிட்ட காணொளி !
தற்போது கட்சியில் இணையும் உறுப்பினர்களுக்காக புதிய செயலி ஒன்றை அரசியல்வாதியாக களமிறங்கியுள்ள நடிகர் விஜய் அறிமுகப்படுத்தியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியின் ஊடாக 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அவர் போட்டியிட உள்ளதாகவும் கூறியுள்ளார்.
இதற்காக புதிய செயலி ஒன்றை நடிகர் விஜய் அறிமுகம் செய்துள்ளார். தற்போது அந்த கட்சியில் உறுப்பினர் சேர்க்கும் பணி நடக்கிறது.
அதை அறிமுகம் செய்து வைத்து பேசிய நடிகர் விஜய், ‛‛பிறப்போக்கும் எல்லா உயிர்க்கும்… என்ற அடிப்படை சமத்துவ கொள்கையை பின்பற்றி வரவிருக்கும் சட்டபை தேர்தலை நோக்கி பயணிக்கிறோம்.
நீங்கள் விருப்பப்பட்டால் இதில் உறுப்பினராக சேரலாம். ரொம்ப எளிமையான வழி தான்” என தெரிவித்துள்ளார்.
#தமிழகவெற்றிக்கழகம் #TVKMembershipDrive #TVKVijay pic.twitter.com/e4DqN18sn2
— TVK Vijay (@tvkvijayhq) March 8, 2024